லஞ்சம் வாங்கிய மின் வாரிய பொறியாளர் கைது

அவிநாசி:  அவிநாசி அருகே குன்னத்தூரில் உள்ள விவசாய நிலத்திற்கு மின்சார இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி மின் பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லுரை அடுத்த குன்னத்தூரில் கிராமிய மின்வாரிய பிரிவு அலுவலகம் துணை மின் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது.

இங்கு பெருமாநல்லுரை அடுத்த மலையப்பாளையம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் உதவி மின் பொறியாளராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க  உதவி மின் பொறியாளர் சுரேஷ் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனையடுத்து விவசாயி இது குறித்து திருப்பூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார். புகாரையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தி சுமார் 5 மணி நேர விசாரணைக்கு பிறகு உதவி மின் பொறியாளர் சுரேஷ் என்பவரை நேற்று மாலை 6 மணியளவில் கைது செய்தனர்.

Related Stories: