×

சில்லி பாயின்ட்...

* ஐபிஎல் டி20 தொடரில் களமிறங்க உள்ள லக்னோ அணிக்கு ‘லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளதாக அந்த அணியின் உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கே.எல்.ராகுல் தலைமையில் லக்னோ அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

* அக். 2019ல் இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர், சூதாட்ட தரகரின் மிரட்டலுக்குப் பணிந்து, ‘ஸ்பாட் பிக்சிங்’ செய்வதற்காக 15,000 டாலர் டெபாசிட் பெற்றதாகவும், சொல்வதை செய்தால் மேற்கொண்டு 20,000 டாலர் தருவதாக அவர்கள் கூறியதாகவும் ஜிம்பாப்வே வீரர் பிரெண்டன் டெய்லர் (35 வயது) தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தான் ஸ்பாட் பிக்சிங் அல்லது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்று பிரெண்டன் தெரிவித்து இருந்தாலும், அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டித் தொடரில் ஜப்பான் அணியுடன் மோதிய நடப்பு சாம்பியன் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

Tags : Chilli Point , Roulette Point
× RELATED சில்லி பாய்ன்ட்...