×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் தகுதி பெற்றுள்ளார். நான்காவது சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சுடன் (24 வயது, 22வது ரேங்க்) நேற்று மோதிய சிட்சிபாஸ் (23 வயது, 4வது ரேங்க்) 4-6, 6-4, 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 3 மணி, 23 நிமிடம் போராடி வென்றார். மற்றொரு 4வது சுற்றில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவ் 6-2, 7-6 (7-4), 6-7 (4-7), 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேக்சிம் கிரெஸ்ஸியை வீழ்த்தினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி மூன்றரை மணி நேரத்துக்கு நீடித்தது. இத்தாலியின் யானிக் சின்னர், கனடா வீரர் பெலிக்ஸ் ஆகர் அலியஸிமி ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

கார்னெட் அசத்தல்: மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் ருமேனிய நட்சத்திரம் சிமோனா ஹாலெப்புடன் (30 வயது, 15வது ரேங்க்) மோதிய பிரான்ஸ் வீராங்கனை ஆலிஸ் கார்னெட் (32 வயது, 61வது ரேங்க்) 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 2 மணி, 33 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. 63வது முறையாக கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் கார்னெட், காலிறுதிக்கு முதல் முறையாக முன்னேறி உள்ளது.

சபலெங்கா ஏமாற்றம்: எஸ்டோனியா வீராங்கனை கயா கானெபியுடன் (36 வயது, 115வது ரேங்க்) நேற்று மோதிய முன்னணி வீராங்கனை அரினா சபலெங்கா (பெலாரஸ், 23 வயது, 2வது ரேங்க்) 7-5, 2-6, 6-7 (7-10) என்ற செட் கணக்கில் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
அமெரிக்காவின் டேனியலி கோலின்ஸ், இகா ஸ்வியாடெக் (போலந்து) ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Tags : Stephen Citichos Halep ,Australian Open , Stefanos Citchibas Halep suffers shock defeat at Australian Open tennis quarterfinals
× RELATED ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன்..!