இறுதியாண்டு தவிர மற்ற உயர்கல்வி பயிலும் 20 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு: அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடைபெறும். இதில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு இல்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாலிடெக்னிக் 1, 3, 5வது செமஸ்டர், பொறியியல் 3, 5, 7 வது செமஸ்டர் மற்றும் பட்டப்படிப்பு இளநிலை தேர்வுகளில் 1, 3, 5வது செமஸ்டர்களுக்கு ஆன்லைனிலும், மேலும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கு 1 மற்றும் 3வது செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும். இறுதி ஆண்டில் இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களுக்கு, அதாவது இளநிலை மாணவர்களுக்கு 6வது செமஸ்டர் மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு 4வது செமஸ்டர் தேர்வுகள் நேரடித் தேர்வுகளாக நடைபெறும். பொறியியல் மாணவர்களுக்கு 8வது செமஸ்டர் நேரடி தேர்வாக நடைபெறும்.

எம்.ஏ, எம்.எஸ்சி முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு 1 மற்றும் 3வது செமஸ்டர் தேர்வுகள் மற்றும் எம்.இ 3வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும். இறுதி செமஸ்டர் தேர்வுகள் அதாவது 4வது செம்ஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும். மேலும் அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும். அதன்படி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 12, 94, 051 மாணவர்களுக்கும், பல்கலைக்கழகங்களில் 52,301 மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் 4,57,196 மாணவர்களுக்கும் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,97,327 மாணவர்களுக்கும் என மொத்தம் 20 லட்சத்து 875 மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: