கோயில் குள பராமரிப்பு கண்காணிக்க ஓய்வு பெற்ற 4 பொறியாளர்கள் நியமனம்

சென்னை: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவு: திருக்கோயில்களுக்கு சொந்தமான குளங்களை பராமரிப்பதற்கென 4 பிரிவுகளை ஏற்படுத்தி, ஒவ்வொரு பிரிவிற்கும் ஓய்வு பெற்ற முதன்மைப் பொறியாளரை குளங்கள் ஆலோசகர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். சென்னை-1, சென்னை-2 காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மண்டலம் அடங்கிய சென்னை பிரிவுக்கு பொதுப்பணித்துறை (ஓய்வு) எல்.சிதம்பரம், கோவை பிரிவுக்கு பொதுப்பணித்துறை (ஓய்வு) தமிழரசன், திருச்சி, கடலூர், விழுப்புரம், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை மண்டலங்கள் அடங்கிய திருச்சி பிரிவுக்கு பொதுப்பணித்துறை (ஓய்வு) குணசேகரன், மதுரை பிரிவுக்கு பொதுப்பணித்துறை (ஓய்வு) வைரவநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: