கடல் பசுக்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை: காங்கிரஸ் எம்பி பாராட்டு

சென்னை: கடல் பசுக்கள் அதிகம் வாழும் மன்னார் வளைகுடா கடலில் 500 சதுர கி.மீ. பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:  கடல் பசுக்கள் அதிகம் வாழும் மன்னார் வளைகுடா பகுதியில் 500 சதுர கி.மீ பரப்பளவிற்கு பல்லுயிர் பாதுகாப்பு பகுதியாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே ஒரே தாவர வகை கடல் பாலூட்டியான கடல் பசுக்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது இந்தியாவிலேயே முதல் கடல் பசு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இதன் மூலம் கடல் பசுக்களை பாதுகாக்க முடியும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கடல் பசுக்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடல் பசு பாதுகாப்புக்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கை போல் மேலும் பல நடவடிக்கைகள் தேவை எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: