கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் 1500 பேரை பணி வரன்முறை செய்ய வேண்டும்

* ஆவணங்களுடன் அதிகாரிகள் நேரில் வரவேண்டும்

* ஆணையர் குமரகுருபரன் அதிரடி நடவடிக்கை

சென்னை: இந்து சமயஅறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் காலிலயாக உள்ள அங்கீரிக்கப்பட்ட பணியிடங்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிமாக பணிபுரியும் தகுதி பெற்ற பணியாளர்களின் பணியினை நிபந்தனைக்குட்பட்டு வரன்முறை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், தகுதியான பணியாளர்கள் சரிபார்ப்பு பட்டியலில் தேவைப்படும் விவரங்களை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களின் நகல்களுடன் பணி வரன்முறைக்கான முன்மொழிவுகளை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த பணியினை விரைந்து முடித்தும் பொருட்டு அவரவர் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் மண்டல இணை ஆணையர் அலுவலக மேலாளர், பிரிவு எழுத்தர் மற்றும் தொடர்புடைய கோயில்களின் செயல் அலுவலர்கள், ஏற்கனவே சமர்பித்த அறிக்கைக்கு சரிபார்ப்பு பட்டியல் உடன் இதுவரை அறிக்கை சமர்பிக்காதவர்கள் உரிய முன்மொழிவினை சரிபார்ப்பு பட்டியல் உடன் சரிபார்ப்பு பட்டியலில் கண்டிப்பாக இணை ஆணையர் ஒப்புதல் உடன் மற்றும் உரிய ஆவணங்களுடன் தவறாக ஆஜராகி பணியினை விரைந்து முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஆஜராகாத மேலாளர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: