கொரோனா விதிமீறிய 381 பேர் மீது வழக்கு மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.5.94 லட்சம் அபராதம்

சென்னை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையொட்டி, நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 5 மணி வரை போலீசார் தீவிர சோதனை நடத்தி, கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 381 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 443 பேரின் இருசக்கர வாகனங்கள், 31 ஆட்டோக்கள், 15 லகுரக வாகனங்கள் மற்றும் 3 இதர வாகனங்கள்  என மொத்தம் 492 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், முகக்கவசம் அணியாத 2,678 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.5 லட்சத்து 94 ஆயிரத்து 100 அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காத 64 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.32 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டது.

Related Stories: