5 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்: தாம்பரம் கமிஷனர் ரவி உத்தரவு

சென்னை: 5 இன்ஸ்பெக்டர்களை மாற்றி தாம்பரம் கமிஷனர் ரவி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி வெளியிட்டுள்ள உத்தரவில், கானத்தூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் வேலு, தாழம்பூர் சட்டம் ஒழுங்கிற்கும், பெரும்பாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முகுடீஸ்வரி, கேளம்பாக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த வெங்கடாச்சலம், கானத்தூர் சட்டம் ஒழுங்கிற்கும், தாழம்பூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், கேளம்பாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: