ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் காலஅவகாசம் 12வது முறையாக 5 மாதம் நீட்டிப்பு: அரசு உத்தரவு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு 12வது முறையாக 5 மாதம் காலநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2017 செப்டம்பர் 25ம் தேதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் 3 மாதத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து 154 பேரிடம் ஆணையம் தீவிரமாக விசாரணை நடத்தியது.ஆனால் அதற்கு அப்போலோ மருத்துவமனை கோர்ட்டில் கோரிய தடை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அப்போலோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் எய்ம்ஸ் மருத்துவ குழு அமைத்து விசாரணையை நடத்தலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் 11வது முறையாக கொடுக்கப்பட்ட 6 மாதம் கால அவகாசம் ஜனவரி 24ம் தேதி அதாவது நேற்றுடன் முடிவடைந்தது. எனவே 6 மாதம் மேலும் காலநீட்டிப்பு செய்ய ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியதை தொடர்ந்து 5 மாதங்கள் காலநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆணையத்தின் செயலாளர் கோமளா மாற்றப்பட்டு புதிதாக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவ குழு அமைக்கப்பட்டு விரைவில் ஆணையம் விசாரணையை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: