மாவட்ட செயலாளர்கள் தியாகிகளின் படத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மொழிப் போர் தியாகிகள் நாளில் தியாகிகளின் படத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஜனவரி 25ம் நாள் மொழிப்போர் தியாகிகள் நாளில் எப்போதும் போல் வீரவணக்கம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.ஆகவே, இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு, தமிழ்மொழி காக்க உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் படத்தினை மாவட்ட திமுக அலுவலகங்களில் மலர்களால் அலங்கரித்து வைத்து, திமுக மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், முன்னோடிகள், நிர்வாகிகள் அனைவரும் மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்திடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியில் அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடித்திடவும் வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: