டெஸ்ட் கேப்டனாக கோஹ்லி 2 ஆண்டு தொடர்ந்திருக்கலாம்: ரவிசாஸ்திரி பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக விராட் கோஹ்லி இன்னும் 2 ஆண்டுகள் தொடர்ந்திருக்கலாம் என முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் எளிதாகத் தொடரலாம் என்று நான் உணர்ந்தேன், ஆனால் இப்போது அவர் பதவி விலகியிருப்பதால், அவருடைய முடிவை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். அணியின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது. ஏழெட்டு வருடங்களில் நான் பார்த்ததிலிருந்து, புதிதாக வரும் வீரர்களின் திறமைகள் ஆச்சரியமாக இருக்கிறது.

கேப்டனைப் பொறுத்த வரையில் ரோகித் சர்மா இரண்டு வடிவங்களில் கேப்டனாக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போது இந்திய அணியை யார் வழிநடத்த வேண்டும் என்று கேட்டால், முதல் சாய்ஸ் ரோகித் சர்மாதான். ரிஷப் பன்ட் அற்புதமான வீரர். அவருக்கு நிறைய திறமை இருக்கிறது. தற்போது நியமிக்கப்பட்ட துணை கேப்டனை விட அவர் சிறந்த மாற்று, என்றார்.

Related Stories: