வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டி.20 போட்டி: 1 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

பிரிட்ஜ்டவுன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வெ.இண்டீஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2வது டி.20 போட்டி இன்று அதிகாலை நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது. ஜேசன்ராய் 45, மொயின்அலி 31 ரன் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணியில் கிராண்டன் கிங் 0, ஷாய் ஹோப் 2, பூரன் 24, டேரன் பிராவோ 23, கேப்டன் பொல்லார்ட் 1, ஹோல்டர் 1 ரன்னில் ஆட்டம் இழந்தனர். 98 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ரொமாரியோ ஷெப்பர்ட்-அகேல் ஹொசைன் அதிரடியில் மிரட்டினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன் தேவைப்பட்ட நிலையில், சாகிப் மஹ்மூத் வீசிய அந்த ஓவரில் 2 பவுண்டரி மற்றும் ஹொசைன் கடைசி 3 பந்தில் ஹாட்ரிக் சிக்சர் உள்பட 28 ரன் விளாசினர்.

20 ஓவரில் வெ.இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன் எடுத்தது. இதனால் 1 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 31 ரன் மற்றும் 3 விக்கெட் வீழ்த்திய மொயின் அலி ஆட்டநாயகன் விருது பெற்றார். 1-1 என சமனில் இருக்க 3வது போட்டி 27ம்தேதி நடக்கிறது.

Related Stories: