தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம்; டிராவிட்

இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில, தீபக் சாகர் இலங்கையிலும், இங்கும் கிடைத்த வாய்ப்பில் நன்றாக பேட் செய்தார். அவர் பேட்டிங்கில் நல்ல திறமைகளைப் பெற்றுள்ளார். இந்தியா ஏ அணியிலும் நான் அவரைப் பார்த்திருக்கிறேன், அவர் நன்றாக பேட் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும். கடந்த போட்டியில் தாகூர் சிறப்பாக பேட் செய்தார். இதுபோன்று பவுலர்கள் பங்களிப்பை வழங்குவது நிச்சயமாக ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஒருநாள் தொடர் எங்களுக்கு ஒரு நல்ல கண்ணைத் திறக்கும் என்று நினைக்கிறேன்.

நாங்கள் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை, ஒன்டே அணியில் இதுவே எனது முதல் பங்களிப்பாகும். 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. அதிர்ஷ்டவசமாக, 2023 உலகக் கோப்பைக்கு முன் செல்ல எங்களுக்கு நேரம் கிடைத்துள்ளது. அதற்கு முன் நிறைய போட்டிகளில் ஆடமுடியும், என்றார்.

Related Stories: