தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்தவர் கைது

சென்னை: சென்னையில் தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்த அரசு ஊழியரை கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 53 வயது நிக்சன் தலைமை செயலகத்தில் நிதித்துறையில் அலுவலக உதவியாளராக பணி செய்து வருகிறார். சேத்துப்பட்டை சேர்ந்த அவர் மீது வில்லிவாக்கத்தை சேர்ந்த ராஜமுருக பாபு என்பவர் கோட்டை போலீசில் புகார் அளித்தார்.

அதில் தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 ஆண்டுகளுக்கு முன்பு தம்மிடம் 14 லட்சம் ரூபாயை நிக்சன் பெற்றதாகவும் ஆனால் உறுதியளித்த படி வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தர மறுப்பதாகவும் கூறி இருந்தார். அதன் பேரில் நிக்சன் மீது மோசடி வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜமுருக பாபு போன்றே மேலும் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி நிக்சன் பணம் பறித்தாரா என்பது குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Related Stories: