சிவகாசி சிறுகுளம் கண்மாயில் ஆகாய தாமரை அகற்றம்

சிவகாசி :  சிவகாசி சிறுகுளம் கண்மாய் பகுதியில் ஆகாய தாமரை செடிகளை அகற்ற தினகரன் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, நேற்று சிவகாசி எம்எல்ஏ அசோகன் தலைமையில் தனியார் தொண்டு நிறுவனத்தினர் செடிகளை அகற்றினர். சிவகாசி சிறுகுளம் கண்மாய் 100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. சிவகாசி, சாட்சியாபுரம், செங்கமலநாச்சியார்புரம், ரயில்வே காலனி குடியிருப்பு பகுதி மழைநீர் இந்த கண்மாயில் தேங்கும். கடந்த பல ஆண்டுகளாக பருவ மழை சரிவர ெபய்யாததால் சிறுகுளம் கண்மாய் வறண்டு கிடந்தது. இதனால் கண்மாயில் இறச்சி கழிவுகள், குப்பை கழிவுகள் கொட்டப்பட்டதால் சுகாதார கேடு ஏற்பட்டது.

இந்நிலையில் சிவகாசியில் வடகிழக்்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் 15 ஆண்டுகளுக்கு பின் சிறுகுளம் கண்மாய் நீர் நிரம்பியது. தற்போது கண்மாயில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுகுளம் கண்மாயில் நீர் நிரம்பியதால் நகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனிடையே சிறுகுளம் கண்மாயில் ஆகாயதாமரை செடிகள் அடர்ந்து முளைத்துள்ளதால் கண்மாய் நீர் மாசடைந்து வருகிறது.

ஆகாய தாமரை செடிகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் நாளிதழில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதை தொடர்ந்து நேற்று காலை சிவகாசி எம்எல்ஏ அசோகன், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூா்த்தி ஆகியோர் தலைமையில் நேற்று தன்னார்வ அமைப்பாளர்கள் ஆகாயதாமரை செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இது சிவகாசி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சிறுகுளம் கண்மாய் சிவகாசி மாநகராட்சி பகுதியின் மைய பகுதியில் அமைந்துள்ளது. சிவகாசி மாநகர மக்களுக்கு பொழுது போக்கு பூங்கா இல்லை. இதனால் மக்கள் விடுமுறை நாட்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இதே போன்று  நடைபயிற்சி மேடை வசதியும் இல்லை. எனவே சிவகாசி மாநகராட்சியின் மைய பகுதியில் உள்ள சிறுகுளம் கண்மாய் கரை பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொழுது போக்கு பூங்கா, மற்றும் நடை மேடை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுகுளம் கண்மாய் ஆக்கிரமிப்பு பகுதியல் மரங்கள், பூச்செடிகள் அமைத்து பூங்கா அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: