வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு தமிழகம் முழுவதும் கோயில்கள் இன்று மீண்டும் திறப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 6ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த 9, 16 மற்றும் நேற்று என 3 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் வெள்ளி, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்று வார நாட்களில் 3 நாட்களில் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால், பல இடங்களில் கோயில்கள் திறந்திருக்கும் என்று வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இருப்பினும் கோவிலுக்கு வெளியே பக்தர்கள் நின்று, இறைவனை தரிசனம் செய்து திரும்பிய காட்சிகளை பார்க்க முடிந்தது. அது மட்டுமல்லாமல் கோயில்களுக்கு வெளியே கற்பூரம் ஏற்றியும், மாலைகளை அணிவித்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த நிலையில் 3 நாட்கள் இடைவெளிக்கு பிறகு இன்று காலை மீண்டும் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: