கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2வது நாளாக கடும் பனிப்பொழிவு-ஊர்ந்து சென்ற வாகனங்கள்

கள்ளக்குறிச்சி :  கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம் உள்ளிட்ட நகரம் மற்றும் கிராம பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் சுமார் 8 மணி வரை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய கார், லாரி, பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் முன்னே செல்லும் வாகனங்கள் சரிவர தெரியாததையடுத்து தங்களது வாகனங்களில் முகப்பு விளக்குகளை போட்டபடி ஊர்ந்து சென்றனர்.

இந்நிலையில் 2வது நாளாக நேற்றும் அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு நிலவியதால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அத்தியாவசிய சரக்கு வாகனங்கள் முன்புறம் சென்ற வாகனங்கள் எதுவும் தெரியாததையடுத்து நேற்று அதிகாலை முதல் முகப்பு விளக்குகளை போட்டபடியே மெதுவாக வாகனங்களை இயக்கி சென்றனர்.

இதனால் குறிப்பிட்ட நேரத்தில் சரக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். இதுபோன்று கள்ளக்குறிச்சி-கச்சிராயபாளையம் சாலை பகுதியில் தினந்தோறும் அதிகாலை சுமார் 4 மணி முதல் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சாதாரண நாட்களிலேயே குளிர்ந்த காற்று வீசினால் மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் ஏற்படும். ஆனால் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் சளி, இருமல் ஏற்படும் என அச்சத்தில் மப்லர், குல்லா உள்ளிட்டவைகளை அணிந்து நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

Related Stories: