சாகோதரர்களிடம் கொஞ்சி விளையாடும் திருநள்ளாறு ஈஸ்வரன் கோயில் யானை-சமூக வலைதளங்கலில் விடியோ வைரல்

காரைக்கால் : காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கோயில் பிரக்ரிதி என்ற பெண் யானை, தனது நண்பர்களான சிறுவர்களுடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், உலகம் புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் அமைந்து உள்ளது. இங்கு 17 வயது பிரக்ரிதி என்ற பெண் யானை உள்ளது. இந்த யானை கோயிலுக்கு வரும் அனைவரிடமும் அன்பாக பழக கூடியது. இந்த நிலையில் காரைக்கால் நேதாஜி பகுதியை சேர்ந்த, சகோதரர்களான யுவபாரதி, நாராயணன் ஆகியோர் தினந்தோறும் திருநள்ளார் கோயிலுக்கு வந்து மாலை நேரத்தில் யானை பிரக்ருதியை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளன. நண்பர்களாக பழகி வரும் சிறுவர்கள் யானை பிரக்ரிதியை பார்க்க வரும் போதெல்லாம் வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகள் வாங்கி யானைக்கு கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் குளத்தில் யானை குளிப்பதை சிறுவர்கள் தினதோறும் பார்த்து விளையாடுவது வழக்கம். இவர்களைப் பார்த்தால் போதும் யானை பிரக்ரிதி, குளத்தில் மூழ்கி ஒளிந்து கொள்கிறது. பின்பு சிறுவர்கள் குரல் எழுப்பியதும், எழுந்து கரைக்கு வருகிறது. பின்பு சிறுவர்களுடன், யானை பிரக்ரிதி விளையாடுகிறது. பின்னர் சிறுவர்கள் யானை பிரக்ரிதிவி விட்டு விடைபெறும் போது டாடா சொல்லி புறப்படுகிறார்கள். பதிலுக்கு தனது தும்பிக்கையால் டாடா சொல்லி சிறுவர்களை ஆசீர்வாதம் செய்து யானை பிரக்ரிதி அனுப்பி வைக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories: