தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டறியும் வகையில் விசாரணை நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார். தஞ்சை மாணவி தற்கொலைக்கு காரணமாக 68 வயதுடைய பள்ளி விடுதி வார்டன் மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகமும் விளக்கமளித்த உத்தரவிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ பள்ளியாக இருந்தாலும் அங்கு இந்துக்கள் தான் அதிகமாக படித்து வருகின்றனர். அங்கு தற்போது பயின்று வரும் மாணவர்கள், முன்னாள் மாணவர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இந்த கருத்துக்கள் எல்லாம் போலீஸ் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக உரிய தண்டனை பெற்று தரப்படும் என்று அமைச்சர் கூறினார். இதற்கு முன்பாக நடந்த விபத்துகள் வேறு விதமாக இருந்தாலும் இவ்வாறு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது குறித்து பள்ளிக்கல்வித்துறை மூலமாக விசாரிக்கப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த கருத்துக்கள் போலீஸ் தரப்பிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இழந்த உயிரை மீண்டும் கொண்டுவர முடியாது என்றாலும், இதுபோன்று மீண்டும் எங்கும் நடக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. தனியார் அமைப்புகள் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் சென்று இதனால் நடந்திருக்கோ அல்லது அதனால் நடந்திருக்குமோ என்று வினவி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட குழந்தை உறுதியாக ஆமா.. இதனால் தான் என்று சொல்லாமல் இருந்திருக்கலாம், போயிருக்கலாம் என்று சொல்லியுள்ளனர். இதில் சோகமான விசயமாக பார்க்கப்படுவது, பெற்றோர்களால் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையிலும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள பள்ளி விடுதி வார்டன் தான் பள்ளி கட்டணம் செலுத்தி படிக்க வைத்துள்ளார். இருப்பினும் மனஉளைச்சல் ஏற்பட காரணமாக அவர்களே இருந்துள்ளதால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் அமைப்புகள் இதனை அரசியல் ஆக்காதீர்கள் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தீர விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Related Stories: