வடபழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி!: காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்..!!

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் இன்றி குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், இன்று காலை முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சென்னை வடபழனி முருகன் கோயிலில் குடமுழுக்கு விமர்சியாக நடைபெற்றது. ஆனால் கொரோனா பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக குடமுழுக்கு விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கோயில் நிர்வாகம் அறிவிந்திருத்த நிலையில், காலை 5 மணி முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அடுத்த 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடைபெற இருப்பதால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலிலிருந்து ஆற்காடு சாலை வரை பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சிறப்பு தரிசனத்திற்கு இன்று அனுமதி இல்லை என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: