சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.36,664க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை சரிவை கண்டிருப்பது நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. தொடர் சரிவை சந்திப்பதும், சில நாட்களில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்தும் வந்தது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.