×

தங்கம் விலை கிடுகிடு சரிவு!: ஒரேநாளில் சவரன் ரூ.40 குறைந்து, ரூ.36,664க்கு விற்பனை..நகை வாங்குவோர் மகிழ்ச்சி..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.36,664க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை சரிவை கண்டிருப்பது நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. தங்கம் விலை ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வருகிறது. தொடர் சரிவை சந்திப்பதும், சில நாட்களில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்தும் வந்தது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.

இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,583க்கும், ஒரு சவரன் ரூ.36,664க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவை கண்டிருப்பது நகை பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. வரும் நாட்களில் நகை விலை மேலும் வீழ்ச்சி அடையாளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Gold price, shaving, Rs 40 less
× RELATED தடுப்பூசியை தவிர வேறு எதுவும் கொரோனா...