நாடாளுமன்ற வளாகத்தில் வேகமாக பரவும் கொரோனா; நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. நாடாளுமன்ற வளாகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு மொத்தம் 2,847 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 271 பேர் மாநிலங்களவையிலும் மற்றவர்கள் மக்களவையிலும் பணியாற்றுபவர்கள் ஆவர்.

இதனிடையே குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். 15 மாதங்களில் 2வது முறையாக அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் மாநிலங்களவை தலைவர் மற்றும் பெருமளவு ஊழியர்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: