வேதாரண்யம் அருகே தமிழக மீனவர்களை ரப்பர் கட்டை, இரும்பு கம்பியால் தாக்கிய கடற்கொள்ளையர்கள் : 3 மீனவர்கள் படுகாயம்!!

நாகை: வேதாரண்யம் அருகே கோடிக்கரைக்கு கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த புஷ்பவனத்தை சேர்ந்த 3 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் , நாகமுத்து , ராஜேந்திரன் ஆகியோர் நாட்டு படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 8 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது நள்ளிரவில் நாட்டு படகை சுற்றி வளைத்த இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் கடற்கொள்ளையர்கள் மீனவர்களை ரப்பர் கட்டை, இரும்பு கம்பி, அரிவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 3 மீனவர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் கடலில் விரிக்கப்பட்டிருந்த சுமார் கிலோ 300 வலை, செல்போன் -1 , பேட்டரி 1, எக்கோ சிலிண்டர் 1, வாக்கி டாக்கி 1, ஜிபிஎஸ் 1, டீசல் 10 லிட்டர் ஆகிய பொருட்களை கொள்ளை அடுத்துச் சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து,  இன்று காலை ஆறு காட்டுத்துறை, கடற்கறைக்கு திரும்பிய மீனவர்கள் மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஒரு பக்கம் இலங்கை கடற்படையினரால் தாக்குதல் இன்னொரு பக்கம் திடீரென கடற்கொள்ளையர்கள் தாக்குதல் என தமிழக மீனவர்கள் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: