சிரியாவில் குர்து இன போராளிகள்- ஐஎஸ் தீவிரவாதிகள் இடையேயான பயங்கர மோதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!

டமாஸ்கஸ் : சிரியாவில் குர்து இன போராளிகள்- ஐஎஸ் தீவிரவாதிகள் இடையேயான பயங்கர மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் அமெரிக்க படைகளின் உதவியுடன் ஒடுக்கப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. சிரியாவின் வடகிழக்கில் குர்து இன போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஐஎஸ் இயக்கத்தின் கரம் ஓங்கி வருகிறது. இந்த நிலையில் குர்து போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஹஸாகா நகரில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் உட்பட 3500 பேர் அடைத்து வைக்கப்பட்ட சிறை ஒன்றின் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அவர்களை சிறைக்குள் வராமல் தடுக்க குர்து படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த மோதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் 77 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் குர்து படையைச் சேர்ந்த 39 பேரும் உயிரிழந்தனர். ஹஸாகா சிறையை தகர்த்து அங்குள்ள ஐஎஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களை தப்பிக்க வைக்கும் முயற்சியாக தீவிரவாதிகள் இந்த தாக்குதலை அரங்கேற்றி இருப்பதாக குர்து படையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: