மதம், சாதி, அரசியல் ரீதியான பாகுபாடுகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்கமுடியாது :அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை :  மதம், சாதி, அரசியல் ரீதியான பாகுபாடுகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்கமுடியாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  தஞ்சை திருக்காட்டுப்பள்ளியில் மாணவி லாவண்யா பயின்ற பள்ளியில் 30க்கும் மேற்பட்ட சக மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை. மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு காரணமானவர்கள், அதற்கான விலையை தந்தே ஆக வேண்டும்;பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், உடனடியாக ஹெல்ப்லைன் மூலம் புகார் தெரிவிக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: