தலிபான் பிரதிநிதிகள் குழு நார்வேயில் பேச்சுவார்த்தை

ஓஸ்லோ: ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாத அமைப்பின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் அங்கீகாரம் அளிக்கவில்லை. மனித உரிமை மீறல்களும் அதிகளவில் நடப்பதால், சர்வதேச அளவிலான உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியை அந்நாடு எதிர்கொண்டுள்ளது. வறட்சி, பஞ்சம் ஏற்பட்டு மக்கள் மோசமான வாழ்க்கை சூழலை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக நார்வேயின் உதவியை தலிபான்கள் நாடியுள்ளனர்.

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆப்கன் அரசின் பிரதிநிதிகள் நார்வே சென்றுள்ளனர். ஓஸ்லோ நகரில் நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆப்கான் பொறுப்பு வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர்கான் முட்டாகி தலைமையிலான குழு இதில் ஈடுபட்டுள்ளது.  2வது நாளான இன்று,  அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளை தலிபான் பிரதிநிதிகள் குழு சந்திக்கிறது.

Related Stories: