நடிகை தேவிகா நம்பியார் திருமணம் இசை அமைப்பாளரை மணந்தார்

சென்னை: மலையாள நடிகை தேவிகா நம்பியார், தமிழில் ஓவியா நடிப்பில் வெளியான ‘கணேசா மீண்டும் சந்திப்போம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் ‘தங்க பஸ்மா குறியிட்ட தம்புராட்டி’, ‘ஒன்’, ‘பரிணயம்’ உள்பட சில படங்களிலும், டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். அவருக்கும், இசை அமைப்பாளர் மற்றும் பாடகர் விஜய் மாதவ்வுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக அவர்கள் திருமணம் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், குருவாயூர் கோயிலில் இந்து மத முறைப்படி அவர்கள் திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: