×

29 ஆண்டுக்கு பிறகு ஜென்டில்மேன்-2

சென்னை: ஷங்கர் இயக்குனராக அறிமுகமான படம், ‘ஜென்டில்மேன்’. கடந்த 1993ல் திரைக்கு வந்த இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, எம்.என்.நம்பியார், சுபா, மனோரமா நடித்து இருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கவுதமி ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். கே.டி.குஞ்சுமோன் தயாரித்த இப்படத்தின் 2ம் பாகம் 29 ஆண்டுகள் கழித்து உருவாக்கப்படுகிறது. இதன் இசை அமைப்பாளராக ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய படங்களின் இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஜென்டில்மேன்-2’ படத்தின் ஹீரோ, இயக்குனர் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Tags : Gentleman , Gentleman-2
× RELATED பலாத்காரம்: 2 பேர் கைது