×

அமைச்சரை ‘தூக்க சதி’ கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

பஞ்சாப்பில் பாஜ.வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை. அங்கு காங்கிரசுக்கு ஆம் ஆத்மி கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்,  காணொலி மூலமாக நேற்று அளித்த பேட்டியில், ‘‘மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பஞ்சாப் தேர்தலுக்கு முன்னதாக எங்கள் கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை கைது செய்ய திட்டமிட்டுள்ளது. அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட எந்த ஒரு அமைப்பின் மூலமும் நான் உட்பட யாரை வேண்டுமானாலும்  அவர்கள் கைது செய்யட்டும்.  எந்த தவறும் செய்யாததால் நாங்கள் அதற்கு  பயப்பட மாட்டோம். அவர்களை புன்னகையுடன் வரவேற்போம்,’’ என்றார்.Tags : Gejriwal , Minister, conspiracy, Kejriwal accused
× RELATED டெல்லியில் நவீன வசதிகளுடன் கூடிய...