பிளஸ் 2 மாணவி தற்கொலை விவகாரம் தஞ்சை நீதிபதி முன் தந்தை, சித்தி வாக்குமூலம்: இரண்டரை மணி நேரம் அளித்தனர்

தஞ்சை: அரியலூர்  மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம், இவரது மனைவி கனிமொழி.  இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். அவரது மகள்  தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ஒரு தனியார் பள்ளிவிடுதியில் தங்கி படித்துள்ளார். பிளஸ் 2 படித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதி விஷம்  குடித்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். விடுதியில் தன்னை  அடிக்கடி வேலை வாங்கியதால் மனஉளைச்சலில் விஷம் குடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 19ம் தேதி மாணவி உயிரிழந்தார்.  இதையடுத்து விடுதி வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டார்.

மதமாற்றம் செய்ய முயன்றதாக கூறி பாஜக சார்பில் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை மாணவியின் பெற்றோர் தஞ்சை நீதித்துறை நடுவர் முன் வாக்குமூலம் அளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று காலை  11.55 மணியளவில் தஞ்சை 3வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் பாரதி முன்  மாணவியின் தந்தை மற்றும் சித்தி ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். மதியம் 2.30 மணிவரை  தனித்தனியாக நீதிபதி வாக்குமூலம் பெற்றார். இது  வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, ஐகோர்ட் கிளையில்  ஒப்படைக்கப்படும் என்று நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: