வட்டார கல்வி மைய பொருட்கள் சேதம் தொடக்கப்பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக தைலம்மை என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது வந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் கல்வித்துறை, ஆசிரியை தைலம்மைக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்காமல் நிறுத்தி உள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த தைலம்மை கடந்த 20ம் தேதி மணமேல்குடி வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளிவிட்டு சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சி வைரலாக பரவியது. இதை தொடர்ந்து ஆசிரியர் தைலம்மையை அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories: