ரூ.20 லட்சம் அபராதம் தொடர்பான நடிகை ஜூஹி சாவ்லா வழக்கு பிப்.3ம் தேதி விசாரணை

புதுடெல்லி: இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யக்கூடாது என்று, நடிகை ஜூஹி சாவ்லா  டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜேஆர்.மிதா முன்னிலையில் கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, அந்த மனுவை அவர் தள்ளுபடி செய்தார். மேலும், வெறும் விளம்பரத்துக்காகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, ஜூஹி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜூஹி சாவ்லா மேல்முறையீடு செய்தார்.

 

இந்நிலையில், ஜூஹி சாவ்லா உள்பட 3 பேர் அபராத தொகையை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட கோரி, டெல்லி மாநில சட்ட சேவை ஆணையம் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது. இந்த மனு கடந்த 21ம் தேதி நீதிபதி அமித் பன்சால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூஹி சாவ்லா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  வழக்கு விசாரணையை தள்ளிவைக்க கோரினார். இதையடுத்து இந்த வழக்கை வரும் பிப்.3ம் தேதிக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Related Stories: