தேசிய நெடுஞ்சாலைக்கு தேவையான நிலத்தை உடனே கையகப்படுத்தி தர வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

சென்னை: சாலை அமைக்கும் பணிக்காக தேசிய நெடுஞ்சாலை துறை கேட்கும் நிலத்தை உடனே கையகப்படுத்தி தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ. வேலு உத்தரவிட்டார். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சம்பந்தப்பட்ட சாலை பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில்  நடந்தது. இக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் தீரஜ்குமார், தலைமை பொறியாளர்கள் சந்திரசேகரன், பாலமுருகன், கோதண்டராமன் உள்ளிட்ட  அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் மாநில தேசிய நெடுஞ்சாலை அலகு மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நடந்து வரும் திட்டப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. அப்போது, தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் நிலுவையில் உள்ள சாலை மற்றும் பாலப் பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை வேகப்படுத்த வேண்டும். மேலும், ஆணையத்துக்கான அனைத்து அனுமதிகளையும் விரைந்து பெற்று தர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நடக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: