தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை நடத்தும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் இன்றைய தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிறது. நீதிமன்றம் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. அதே நேரம் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், இப்போதைக்கு தேர்தல் நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

Related Stories: