×

தமிழகத்தில் 30 ஆயிரத்தை தாண்டியது கொரோனா; ஒரே நாளில் 30,580 பேருக்கு உறுதி: சென்னையில் 6,383 பேர் பாதிப்பு; சுகாதாரத்துறை அறிக்கை..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 3.92 கோடியே ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 4.89 லட்சத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 30,580 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17,324 பேர் ஆண்கள், 13,256 பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 லட்சத்து  33ஆயிரத்து 990 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 30ஆயிரத்து 567ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 330 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 40 பேர் உயிரிழந்துள்ளார். 15 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 25 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ளது. இன்று 24,283 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 95ஆயிரத்து 818 ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Corona ,Tamil Nadu ,Chennai ,Health Department , Corona exceeds 30,000 in Tamil Nadu; 30,580 confirmed in one day: 6,383 affected in Chennai; Health Department Report ..!
× RELATED தமிழ்நாட்டில் கொரோனவை கட்டுப்படுத்த...