×

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்கவும்; மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்.!

சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாளில் அவருக்கு இந்தியா நன்றியுடன் மரியாதை செலுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர இந்தியா, ஆசாத் ஹிந்த் என்ற தனது கடுமையான உறுதிப்பாட்டை நிறைவேற்ற அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் அவரை ஒரு தேசிய அடையாளமாக மாற்றியது என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், அவரது லட்சியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றென்றும் ஊக்கமளிக்கும் என பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளில் அவருக்கு தலைவணங்குகிறேன் என தெரிவித்துள்ளார். நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்ள வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவித்தால், ஒட்டுமொத்த தேசமும், தேசிய தலைவருக்கு மரியாதை செலுத்தும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, வங்காளம் மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என தெரிவித்தார்.

Tags : Netaji Subash Chandrabhos ,West ,Mamta Panerji , Declare Netaji Subhash Chandra Bose's birthday a national holiday; West Bengal Chief Minister Mamata Banerjee's request!
× RELATED மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி...