இன்று கடைசி ஒருநாள் போட்டி: ஆறுதல் வெற்றி பெறுமா இந்தியா?

கேப் டவுன்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக இன்று நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில்,  ஆறுதல் வெற்றி பெறும் முனைப்புடன்  இந்தியா  களமிறங்குகிறது.தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.  அதில் ஒரு ஆட்டத்தில் மட்டும் வென்ற  இந்தியா, அந்த தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட  ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன.  பார்ல் நகரில் நடந்த முதல்  ஆட்டத்தில்  31 ரன் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா தோல்வியை சந்தித்தது. தென் ஆப்ரிக்கா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது.

இனி இழப்பதற்கு ஏதுமில்லை என்றாலும், ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்ப கேப்டன் லோகேஷ் ராகுலும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிடும் அணியில் ஏதாவது மாற்றம் செய்ய முயற்சிக்கலாம். அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே தென் ஆப்ரிக்க அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். ஆறுதல் வெற்றிக்காக இந்தியாவும், ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட் வாஷ் செய்ய தென் ஆப்ரிக்காவும் வரிந்துகட்டுவதால், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Related Stories: