அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது கிடப்பில் அங்கன்வாடி மைய கட்டிட பணிகள்: விரைந்து முடிக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் ஊராட்சியில் கிருஷ்ணாபுரம் கண்டிகை கிராமத்தில் சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் உள்ளது. இதில் அதே பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக பழுதடைந்து செடி, கொடிகள் படந்து காணப்பட்டது. மேலும், கட்டிடத்திலும் விரிசல் ஏற்பட்டது.

இதில் பூரான், தேள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளுடன் தான் மாணவ - மாணவிகள் அச்சத்துடன் படித்து வந்தனர். இதனால் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அங்கன்வாடிக்கு அனுப்ப தயங்கினர். இதுகுறித்து கலெக்டர் மற்றும் பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் அப்பகுதி மக்கள் பலமுறை  மனு கொடுத்தனர். இந்நிலையில், கடந்த 5 வருடங்களாக பழைய கட்டத்தில் இருந்து அங்கன்வாடி மையம் தனியார் கட்டிடத்தில் ₹750 வாடகையில் இயங்கி வருகிறது. இதனிடையே, புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் 2019-2020ம் ஆண்டு திட்டத்தில் ₹10 லட்சம் செலவில் தொடங்கிய பணிகள் பாதி கட்டி முடிக்கப்பட்டு பணிகள் பாதியில் நிற்கிறது. அதிலும் செடிகொடிகள் படர்ந்துள்ளது. எனவே, அதிமுக ஆட்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட அங்கன்வாடி மைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: