மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நிறைவடைந்தது

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த இந்திய நாட்டிய  விழா கிராமிய நடனம், மெல்லிசை, பரத நாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது.இந்திய நாட்டிய விழா கடந்த டிசம்பர் 23ம் தேதி கோலாகலமாக துவங்கியது. நாட்டிய விழாவை, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழக ஊரகத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து, தினமும் பாரம்பரிய கலைகளான மங்கள இசை, கிராமிய நடனம், பரத நாட்டியம், குச்சிப்புடி, கதாக், ஒடிசி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடந்தது. கடைசி நாளான நேற்று கிராமிய நடனம், மெல்லிசை, பரத நாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் இந்திய நாட்டிய விழா நிறைவடைந்தது. இதனை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டு மகிழ்ந்தனர்.

Related Stories: