சித்தாமூர், லத்தூர், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி திட்டம்: க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி சித்தாமூர், லத்தூர் ஒன்றியங்களில் தமிழக அரசின் தாலிக்கு தங்கம் மற்றும் திருமணம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள சித்தாமூர் மற்றும் இடைக்கழிநாடு பேரூராட்சியில்  நடந்த நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீரமுத்து, ஞானபிரகாசம் ஆகியோர் வரவேற்றனர். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு 266 பேருக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்கினர்.இதில், மாவட்ட சமூக அலுவலர் சங்கீதா, சித்தாமூர் ஒன்றிய குழு துணை தலைவர் பிரேமா சங்கர், சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு, மாவட்ட கவுன்சிலர்கள் குணசேகரன், சாந்தி ரவிக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்  நாகப்பன், ஊராட்சி மன்ற தலைவர் குமுதா மதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து லத்தூர் ஒன்றியத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் சுபலட்சுமி பாபு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள்தேவி வரவேற்றார். மாவட்ட செயலாளர், எம்பி, தொகுதி எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு 166 பேருக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகைகளை வழங்கினர். இதில்,  மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், லத்தூர் ஒன்றிய குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பாபு, மாவட்ட துணை செயலாளர் வெளிக்காடு ஏழுமலை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் மோகன்தாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம்: மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு, 301 பேருக்கு ₹2.23 கோடி திருமண நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தங்கமும், அச்சிறுப்பாக்கத்தில் 170 பேருக்கு ₹1.2 கோடி திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினர்.

Related Stories: