தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று முன்தினம் குறைந்த நிலையில், நேற்று சவரனுக்கு 128 உயர்ந்தது.தங்கம் விலை கடந்த சில மாதமாக ஒரு நிலையாக இல்லாமல் இருந்து வருகிறது. தமிழகத்தில் 3 நாட்களில் சவரன் 408 அளவுக்கு உயர்ந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தங்கம் விலை திடீரென குறைந்தது. அதாவது கிராமுக்கு 16 குறைந்து ஒரு கிராம் 4,572க்கும், சவரனுக்கு 128 குறைந்து ஒரு சவரன் 36,576க்கும் விற்கப்பட்டது.

இந்த விலை குறைவு ஒருநாள் கூட நீடிக்கவில்லை. நேற்று காலை மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு 16 உயர்ந்து ஒரு கிராம் 4,588க்கும், சவரனுக்கு 128 உயர்ந்து ஒரு சவரன் 36,704க்கும் விற்கப்பட்டது. மாலையிலும் அதே விலைதான் நீடித்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும்.

Related Stories: