ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுனர்கள் பயணிகளின் ரயில் டிக்கெட் நகலை மொபைலில் வைத்திருக்க வேண்டும்: சென்னை காவல்துறை அறிவுறுத்தல்

சென்னை: இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது ஆட்டோ  மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் பயணிகளின் ரயில் டிக்கெட்டின் நகலை  தங்களது  செல்போனில் வைத்திருக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை   அறிவுறுத்தியுள்ளது.

காவல்துறை வெளியிட்ட  அறிக்கை: வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளின் வசதிக்காக முழு ஊரடங்கு நாளான இன்று ரயில், பஸ் நிலையங்களில் ஆட்டோ மற்றும் கால்டாக்சிகள் இயங்க அரசு அனுமதித்துள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில்குமார் சரத்கர் தலைமையில், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலைய ஆட்டோக்கள் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் சங்கங்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்று ஆட்டோ, டாக்சி சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  பயணிகளை இறக்கிவிட்டு வாகனங்கள் வெறுமையாக  திரும்பும்போது, ​​போலீசார்  வாகனத்தை நிறுத்தி அவர்களை சிறைபிடிப்பதாக  சங்கங்கள் புகார் கூறியுள்ளனர்.  காவல்துறையினர் சோதனையின்போது வாகன ஓட்டுனர்கள் பயணிகளின் ரயில்  டிக்கெட்டின் நகலை தங்களது மொபலில்  வைத்திருக்குமாறு   அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஒட்டுனர்கள் பயணிகளை அவர்கள் இடத்தில் இறக்கிவிட்டு  திரும்பி  காலியாக வருவதால் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர். இது  குறித்து ஓலா மற்றும் ஊபெர் அதிகாரிகள் இதை ஏற்கனவே தங்கள் உயர்  அதிகாரிகளின்  கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இது சம்பந்தமாக  முடிவு செய்யப்படவுள்ளது. காவல்துறை உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையினருடன், போக்குவரத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட தமிழ்நாடு போக்குவரத்து ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை  காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: