கர்நாடகா நீர்வளத்துறை அமைச்சருக்கு பதிலடி ஒகேனக்கல் 2வது குடிநீர் திட்டத்தை நிச்சயமாக நிறைவேற்றுவோம்: தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி

ெசன்னை: தமிழக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டள்ள அறிக்கை:ஒகேனக்கல் 2வது குடிநீர் திட்டத்தை ₹4,600 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்படும் என்ற ஓர் அறிவிப்பை கண்டு கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் வெகுண்டெழுந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்அறிவித்த ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை செயல்பட விடமாட்டோம் என்று ஓர் அறிவிப்பை செய்திருக்கிறார். குடிநீர் தேவைக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று சொல்வது எந்தவிதமான மனிதாபிமானம் என்று தெரியவில்லை. மனிதாபிமான அடிப்படையிலும் சரி சட்டபூர்வமான அடிப்படையிலும் சரி தமிழ்நாட்டுக்கு ஒகனேக்கல் 2வது குடிநீர் திட்டத்தை ஆரம்பிக்கின்ற உரிமை உண்டு.

காவிரி நதி நீர் ஆணையம் 5.2.2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பில் நிகர குடிநீர் தேவைக்காக 2.2 டி.எம்.சி நீர் ஒதுக்கியுள்ளது. அதாவது, சுமார் 11 டிஎம்சி காவிரி நீரிலிருந்து குடிநீருக்காக எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இப்படி, அனைத்து பங்களிப்பும் முடிந்த பிறகும் எஞ்சிய நீர்ப்பங்கீட்டின் கீழ் கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நமக்கு கிடைத்தது 25.71 டி.எம்.சி. 16.2.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மூலம், காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதி தீர்ப்பை உறுதி செய்திருக்கிறது.மேலும், இந்திய மற்றும் தமிழ்நாட்டின் நீர்வள கொள்கைகளின்படி குடிநீர் தேவைக்குதான் முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இறுதி தீர்ப்பு உட்கூறு 18ன்படி இம்மாதிரியான அத்தியாவசிய தேவைகளுக்கு நீரை உபயோகப்படுத்திக் கொள்ள உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆக, எப்படி பார்த்தாலும், காவிரி-ஒகேனக்கல் 2வது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.

Related Stories: