மாவட்ட செயலர் மீது புகார் குமரி அமமுக பாசறை பெண் நிர்வாகி கட்சி பதவி பறிப்பு

நாகர்கோவில் : நாகர்கோவில் அருகே இறச்சக்குளத்தை சேர்ந்தவர் ராணி (47). குமரி கிழக்கு மாவட்ட அமமுக இளம்பெண்கள் பாசறை செயலாளர். இவர் சுசீந்திரம் காவல் நிலையத்தில்அளித்த புகார் மனுவில், அமமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ராகவன், மாவட்ட இணை செயலாளர் பொறுப்பு வாங்கி தருவதாக கூறி ரூ.3.50 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும், பணத்தை திருப்பி கேட்டபோது ஆபாசமாக, அவதூறாக பேசியதாக கூறி இருந்தார்.

கட்சியின் மாவட்ட செயலாளர் ராகவன், அது பொய்யான குற்றச்சாட்டு, சட்டரீதியாக புகாரை சந்திப்பேன் என்றார். இதையடுத்து அவர் மீது புகார் அளித்த ராணியை குமரி கிழக்கு மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: