இந்தி ரீமேக் விவகாரம் அல்லு அர்ஜுன் பட ரிலீஸ் ரத்து

மும்பை: இந்தியில் டப்பிங் செய்து வெளியிட இருந்த அல்லு அர்ஜுன் படத்தின் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் தெலுங்கில் உருவான படம், அலா வைகுந்தபுரம்லோ. சமீபத்தில் திரைக்கு வந்த அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் பெரிய வெற்றிபெற்றது. குறிப்பாக, பாலிவுட்டில் இப்படத்தை இந்தியில் வெளியிட்டனர். இதுவரை ₹80 கோடிக்கு மேல் இப்படம் இந்தியில் வசூலித்துள்ளது. இதனால், இதற்கு முன்பு அல்லு அர்ஜுன் நடித்து ஹிட்டான அலா வைகுந்தபுரம்லோ படத்தை இந்தி யில் டப் செய்து, வரும் 26ம் தேதி திரையிடுவதாக அறிவிக்கப்பட்டது.

தெலுங்கில் அந்தப் படத்தை தயாரித்த அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் இதையறிந்ததும் அதிர்ச்சிஅடைந்தார்.காரணம், இப்படத்தின் இந்தி ரீமேக்கை அவர்தான் தயாரித்து வருகிறார். இப்படத்தை இந்தியில் டப் செய்யும் கோல்ட்மைன்ஸ் நிறுவனத்துடன் அல்லு அரவிந்த் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் சுமூக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, அலா வைகுந்தபுரம்லோ படத்தின் டப்பிங் ரிலீசையே கைவிடுவதாக கோல்ட்மைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories: