கோவையில் சொத்து வாங்கி குவித்ததாக அதிமுக நிர்வாகி, மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு

கோவை:கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே 4 வீரபாண்டி பேரூராட்சியில் தலைவராக பணியாற்றியவர் ஜெயராமன் (47). அதிமுகவை சேர்ந்த இவர், கடந்த 2001 முதல் 2016வரை மூன்று முறை பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார்.கடந்த 2011ல் இவர் தேர்தலில் போட்டியிட்ட போது அபிடவிட் தாக்கல் செய்திருந்தார். இதில் இவர், மற்றும் மனைவி கீர்த்தி  பெயரில் அசையும், அசையாத சொத்துக்கள், வங்கி டெபாசிட் தொகை என 1.25 கோடி ரூபாய்க்கு சொத்து மதிப்பு காட்டியிருந்தார்.

5 ஆண்டு கடந்த நிலையில் 2016ல் சொத்து மதிப்பாக 3.43 ேகாடி ரூபாய் என அபிடவிட்டில் சொத்து மதிப்பு குறிப்பிட்டிருந்தார். 5 ஆண்டு காலத்தில் சொத்து மதிப்பு வெகுவாக அதிகமானது எப்படி என சந்தேகம் எழுந்தது. இதையடுத்து ஜெயராமன், கீர்த்தி ஆகியோர் மீது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். ஜெயராமன், கீர்த்தி ஆகியோர் மீது அரசு பதவியை பயன்படுத்தி சொத்து குவித்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: