ஐபிஎல் 15-வது தொடர் : புதிதாக களமிறங்கும் இரு அணிகள்: மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும்: பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தகவல்

டெல்லி: நடப்பாண்டின் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதி வரை நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார். கிரிக்கெட் ஆர்வலர்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்றான ஐபிeல் கிரிக்கெட் போட்டியின் 15-வது தொடர் இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து மே மாத இறுதி வரை நடைபெறும் என பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும், இந்தாண்டு புதிதாக லக்னோ மற்றும் ஆமதாபாத் அணிகள் அறிமுகமாவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிற நிலையில்  போட்டிகளை இந்தியாவில் நடத்த விரும்புவதாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் விரும்புவதாகவும் இந்தியாவில் ஐபிஎல் தொடரை நடத்துவதில் தான் உறுதியாக உள்ளோம் என  ஜெய் ஷா தெரிவித்தார்.   

ஆனால், அதிகாரப்பூர்வமாக போட்டிகள் நடைபெறும் இடம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்தியாவில் கொரோனா நோய் பரவல் அதிகரித்த காரணத்தால் ஐபிஎல் 13-வது தொடர் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெற்றது. அதேபோல் 14-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா தொற்று அதிகரித்ததால் பாதியில் நிறுத்தப்பட்டு எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரசு அமீரகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது ஐபிஎல் தொடர் எங்கு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: