தமிழகத்தில் 30 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 30,744 பேருக்கு தொற்று உறுதி: சுகாதாரத்துறை அறிக்கை..!

சென்னை: தமிழகத்தில் 30 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; மாநிலம் முழுவதும் இதுவரை 6,04,45,762 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 1,55,648 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 31,03,410ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 37,178ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 23,372 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரை தமிழத்தில் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 28,71,535ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு 1,94,697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 21 நாட்களாக கொரோனா தொற்று ஏறுமுகமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஜன.1ம் தேதி 1,489ஆக இருந்த கொரோனா தொற்று இன்று (ஜன.22) 30,718 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: